பங்களாதேஷில் இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அகர்தலாவில் உள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டு கொடியை சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பங்களாதேஷ் அரசு இந்தியத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பியது.
மேலும், அகர்தலா துணைத் தூதரகத்தில் வீசா சேவை உட்பட அனைத்து சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தது.
அகர்தலாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை அடுத்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.