பங்களாதேஸூன் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா மீது மேலும் நான்கு கொலை வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன. பங்களாதேஸூல் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து, பிரதமராகப் பதவி வகித்த சேக் ஹசீனா, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
பங்களாதேஸூல் தற்போது, இடைக்கால அரசு ஆட்சி நடாத்தி வருகிறது.
நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பில், ஏற்கனவே சேக் ஹசீனா மீது, 42 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவரது கடவுச்சீட்டும் இரத்துச் செய்யப்பட்டது. சேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டதால், அவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.