பசிபிக் சமுத்திரத்தில் 7.1 ரிக்டர் அளவில் புவியதிர்வு!

0
147

பசிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய புவியதிர்வு உணரப்பட்டுள்ளது.

7.1 ரிக்டர் அளவுடையதாக இந்த புவியதிர்வு பதிவாகியதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.

நேற்று இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான புவியதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று புவியதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.