தென்மேற்கு ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வட-வடகிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் அட்சரேகை 13.00 N மற்றும் தீர்க்கரேகை 81.70 E இல் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
எவ்வாறாயினும், நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.