பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் – இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து?

0
5

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால்இ அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.