பணிப்பெண் ராஜகுமாரி மரணம் : விசாரணையின் முடிவு எதிர்வரும் 25ஆம் திகதி

0
125
வெலிக்கடை பொலிஸாரின் தடுப்பில் இருந்த போது உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண் ஆர். ராஜகுமாரியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் முடிவு எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சிய விசாரணைகள் நீதிமன்றில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.