பதிவு செய்யாமல் லெபனானில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு

0
54

லெபனானில் சட்டவிரோதமாக பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு  பொது மன்னிப்பினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்யாமல் லெபனானுக்கு வேலைக்காகச் சென்ற இலங்கையர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.