அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமர குற்றிகளை ஏற்றிவந்த அறுவர் இன்று அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமர குற்றிகளை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்தநிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். எனவே வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மரங்களை கடத்திய குற்றச்சாட்டின் கீழும் ஏனைய ஐவர் சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமர குற்றிகளுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.