பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

0
211

பப்புவா நியூகினியாவில், நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.