வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபினை எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர், ‘வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற பதாகையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டம் என்பதை வலியுறுத்தியும் கருத்து சுதந்திரம் பறிபோகும் எனவும் இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரியப்படுத்தினர்.