பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணபதிபிள்ளை மோகனுக்கு பிணை!

0
131

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிபிள்ளை மோகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முகப்புத்தகத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சார்பாக கருத்துரைத்தமை தொடர்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றினால் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும், 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையிலும் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.