பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை

0
141

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் வியாபார நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸ் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில், ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் அறிக்கைகளைக் கோரவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதால், பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் வியாபார நிலையங்களைத் திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
நடமாடும் வியாபாரங்களுக்கான அனுமதியைப் பெறுதல் மற்றும் அந்த அனுமதியைப் பயன்படுத்தி ஏனைய வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் கண்காணித்துள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உட்பட பொலிஸ் குழுவினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.