நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை மேலும் நீடிக்குமாறு, விசேட வைத்தியர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, செயலாளர் ஆர்.ஞானசேகரம் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்கள்,
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இந்நிலைமை தொடருமாயின் வைத்தியசாலைகளால் அதனை எதிர்கொள்ள முடியாதச் சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே இதனைக் கருத்திற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றும் அதற்காக விஞ்ஞானபூர்வமான நியாயமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாவதுத் தடுப்பூசி விரைவாகப் பெற்றுக்கொடுப்பதை உறுதிபடுத்துவதற்கு நிரந்தர அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.