பயணத்தடை நீக்கம்: அமெரிக்கா பயணமானார் ரஞ்சன் ராமநாயக்க!

0
151

ரஞ்சன் ராமநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்கா சென்றதாக விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 3.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் கே.ஆர்-663 இல் டோஹாவிற்கு புறப்பட்டார். அங்கிருந்து அவர் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் சுமார் 10 நிகழ்வுகளிலும், கனடாவில் 05 நிகழ்வுகளிலும் ரஞ்சன் ராமநாயக்க பங்கேற்க உள்ளார். ரஞ்சன் ராமநாயக்க நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தை வந்தடைந்த அவர் பயணத்தடை காரணமாக பயணத்தை இரத்து செய்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தினால் தடை நீக்கப்பட்டதையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.