பரந்தன் – பூநகரி விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0
108

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் – பூநகரி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் பலி | Family Killed In Kilinochchi Accident

விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோ.புருசோத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.