பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மார்ச் 31ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி 25 மில்லியன் ரூபாவுக்கும் குறைவான தொகையில் கடன்பெற்றுள்ள சிறிய மன்றும் மத்திய தர வரத்தகர்களுக்காக 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரை நிவாரண காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 மில்லியன் ரூபா முதல் 50 மில்லியன் ரூபாவுக்கு இடையில் கடன் பெற்றுக்கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான 2025 செம்டெம்பர் 30திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கடன் பெற்றுள்ள வர்த்தகர்கள் தமக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 2025 ஜுலை 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண வாய்ப்புகளை 2025 மார்ச் 31 முன்னர் வங்கிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பராட்டே சட்டத்தை 2025 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். …