
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான அறிவித்துள்ளது.
சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் தொடர்ந்து 5 நாட்களாகச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் அவர் கலந்து கொள்ளவிருந்த பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.