பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
74

எதிர்வரும் 6 ஆம் திகதி, கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன, நாளை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை காலப்பகுதியில், பாடங்கள் தொடர்பான குறிப்புக்கள், பாட விரிவுரை, வகுப்புகள் நடத்துதல் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், கையேடுகள் வழங்குதல் மற்றும் அச்சிடப்பட்ட கையேடுகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.