பலாங்கொட, மரத்தென்ன தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயம்!

0
86

இரத்தினபுரி, பலாங்கொட, மரத்தென்ன தமிழ் வித்தியாலயத்திற்கு சென்ற கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், பாடசாலை சமூகத்தினரால் வரவேற்கப்பட்டார்.

பாடசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுவரெலியா, கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மீண்டும் இயங்குமெனவும் இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இதன்போது குறிப்பிட்டார்.