பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

0
122

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை எட்டு மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்பாடமை உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பிற்கு கதிரியக்க நிபுணர்கள், ஆய்வுகூட வல்லுனர்கள், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட பல துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.