பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது 

0
3

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்  மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கோணபால பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபர்  2023 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அவிசாவளை பகுதியில் இரண்டு நபர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அவிசாவளை பகுதியில் இவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவிசாவளை பகுதியில்  துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில்  இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.