பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாத்துவ பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.