பல பெண்களுடன் தொடர்பு – தலைமறைவான பிரபல சீரியல் நடிகர்..

0
89

ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது மனைவி லட்சுமி நயார் புகார் அளித்தார்.

தலைமறைவாக இருந்த சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது .

மலையாளம் மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ராகுல் ரவி, தமிழில் நந்தினி சீரியல் மூலம் அறிமுகமாகி பின்னர், பிரபல தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். 2020-இல் தனது காதலி லட்சுமி நாயரை ராகுல் ரவி திருமணம் செய்த நிலையில், ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இந்த ஜோடி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தது.

ஆனால், சில மாதங்களிலேயே இந்த தம்பதி பிரிந்த நிலையில், ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது மனைவி லட்சுமி நயார் புகார் அளித்தார். இதனால், ராகுல் ரவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 மாதங்களாக தலைமறைவாக உள்ள ராகுல் ரவிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.