ஹம்பாந்தோட்டை, தங்கல்ல பொலிஸ் பிரிவில் வீடுகளில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்ன பிரதேசத்தில் பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர், பல வீடுகளில் பெறுமதியவாந்த பொருட்களை திருடிய குற்றத்துடன் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைவாக திருட்டுக்களுடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்கல்ல, ரன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 28, 30 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இதுவரை திருடியதாக கூறப்படும் குளிர்ச்சாதனப்பெட்டி, இரு துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.