28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பழ நுகர்வு இலங்கையில் அதிகரிப்பு!

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் பழ நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் வருடாந்தப் பழங்களின் தேவை 19.6 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். (196,9371 மெட்ரிக் தொன்). 2023ஆம் ஆண்டு பழ உற்பத்தி அதிகரிப்பைப் பார்க்கும் போது வாழை, மாஇ அன்னாசி, பப்பாளி போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர, 2023 ஆம் ஆண்டில் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அதன்படிஇ 38,201 மெட்ரிக் தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2027-ம் ஆண்டுக்குள் வாழை உற்பத்தி ஹெக்டேருக்கு 19.5 மெட்ரிக் தொன்னாகவும், மா உற்பத்தியை 9.5 மெட்ரிக் தொன்னாகவும், பப்பாளி 45 மெட்ரிக் தொன்னாகவும், அன்னாசி 14 மெட்ரிக் தொன்னாகவும், ஆரஞ்சு பழத்தை 30 மெட்ரிக் தொன்னாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரக இனப்பெருக்கம், கலப்பின இரகப் பெருக்கம், அதிக அடர்த்தி கொண்ட பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, தாவர ஊட்டச் சத்து அறிமுகம், பயிர் சேதத்தைக் குறைத்தல் அறிமுகப்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்ப நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமனி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles