பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கு ஜப்பான் ஆதரவு!

0
17

பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜப்பான் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் புகுஷிரோ நுகாகாவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து, பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ” உறவை” வளர்ப்பதில் அவரது தலைமையை ஜெய்சங்கர் மேலும் பாராட்டினார்.

எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், “ஜப்பான் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் புகுஷிரோ நுகாகாவை டெல்லியில் அவரது பாராளுமன்ற சகாக்கள் மற்றும் வணிகக் குழுவுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆதரவையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி.”

“திறமை பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிக இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் நிகழ்ச்சி நிரலை உருவாக்க ஒப்புக்கொண்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

லாட்வியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைபா பிரேஸையும் ஜெய்சங்கர் சந்தித்து பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய இணைப்புகள் குறித்து ஆராய்தார்.

” லாட்வியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைபா பிரேசுடன் ஒரு நல்ல உரையாடல் இடம்பெற்றது. பஹல்கம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய தொடர்புகள் குறித்து ஆராய்ந்தேன். உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடினோம்” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜப்பான் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் புகுஷிரோ நுகாகா மற்றும் அவரது குழுவை சந்தித்தார்.

சபாநாயகர் தலைமையிலான ஜப்பானிய பிரதிநிதிகள், அஸ்ஸாமுக்கு மூன்று நாள் பயணத்தின் போது ஜாகிரோட்டில் உள்ள டாடாவின் குறைகடத்தி பரிசோதனை நிறுவனத்தைப் பார்வையிட்டனர் .அஸ்ஸாமுக்கு ஜப்பானிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

ஜப்பான் அஸ்ஸாமுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளதாகவும், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் ஏற்கனவே அசாமுக்கு ஆதரவளித்து வருவதாகவும் சர்மா கூறினார்.