பாகிஸ்தானில் நில அதிர்வு!

0
17

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. 

அதிகாலை 5.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.