பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். வரும் போது இதய பகுதியளவு செயலிழக்கும் நிலையில் வந்தார்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு முழுமையாக இதயத்தை மாற்ற முடிவு செய்தனர். மேலும் இதற்காக 35 லட்சம் செலவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு சென்னையை சேர்ந்த டிரஸ்ட் மூலம் பண உதவியும் கிடைக்கப்பெற்று இலவசமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியை சேர்ந்த 69-வயது நபர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது இதயத்தை இந்த பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு இருக்க சென்னையில் வைத்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இவ்வளவு நாட்களாக அந்த பெண் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு உயிரும் முக்கியம், அவர் எங்களது மகள் என்று கூறினர்.
இவ்வாறு இருக்க சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாகிஸ்தான் இளம்பெண், தமிழக மருத்துவர்கள் மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் பாகிஸ்தான் சென்று பேஷன் டிசைனராக விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் பெற்றோர் கூறுகையில், பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அங்கு இருக்கும் டாக்டர்கள் இங்கு இதயம் மாற்றம் செய்வதற்கான வசதிகள் இல்லை என கூறினர். இதனால் நாங்கள் இந்தியா வந்தோம். இந்தியா எங்களது மகளிற்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் ஹாக்கி உலக கோப்பை கோல்கீப்பர் மன்சூர் அகமது ஏற்கனவே இந்தியாவில் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் தற்போது அந்த இளம் பெண்ணிற்கு சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது சென்னை மக்களுக்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.