பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் சுரங்கதொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனியாருக்கு சொந்தமான சிறிய நிலக்கரி சுரங்கத்தில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எந்த குழுவினரும் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை.