பாடசாலை மாணவர்கட்கான சீருடைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

0
97

2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முதலாவது சீருடை தொகையை, சீன அரசாங்கம் நேற்று கல்வி அமைச்சிடம் கையளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.