பாடசாலை மாணவர்களுக்கான கணினி
உபகரணங்கள் வழங்கல்

0
250

சமாரியனின் கரங்கள் அமைப்பினால் கிழக்குமாகாணத்தில் முன்னெடுத்து வரும் இலவச கல்வி திட்ட செயல்பாட்டின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கணனி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .
கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களின் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களின் கணனி கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் அவுஸ்ரேலியா நாட்டு தான்னார்வ தொண்டு நிறுவனமான ஐ டிரென் நிறுவன நிதி அனுசரணையில் கணிணிகள் வழங்கப்பட்டன.

சமாரியனின் கரங்கள் அமைப்பு மட்டக்களப்பு 5 கல்வி வலயங்களில் முன்னெடுத்து வரும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரினால் சமாரியனின் கரங்கள் அமைப்புக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களுக்கான கணிணிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் கனிஷ்ட வித்தியாலயம் ,மட்டக்களப்பு கல்லடி விநாயக வித்தியாலயம் ,மட்டக்களப்பு நாவலடி
கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் கணனி கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் கணனி உபகரணங்கள் வழங்கப்பட்டது. .

சமாரியனின் கரங்கள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி . ஹரிசங்கர் தலைமையில் டம்பெற்ற கணனிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஹரிஹரராஜ் ,பாடசாலைகளின் அதிபர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர் . இதேவேளை மாணவர்களின் பாடவிதான செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கல்லடி விநாயக வித்தியாலய அதிபர் தலைமையில் தரம் மூன்று மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வும் பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .