பாடசாலை வகுப்பறைகளை அழகுபடுத்தும்
வகுப்பறைக் கவின் நிலைப்போட்டி

0
176

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை வகுப்பறைகளை அழகுபடுத்தும் வகுப்பறைக் கவின் நிலைப்போட்டி நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையிலும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ச{ஹதுல் நஜீம் வழி காட்டலிடலும் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ச{ஹதுல் நஜீம் கலந்து கொண்டார்.

நடுவர்களாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம். பௌஸ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. ஜாபிர், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.எம். ஸம் ஸம் ஆகியோரும் , இச்செயற்றிட்ட இணைப்பாளர்களான ஆசிரியர்கள் ஏ.ஆர். பைறூஸ்கான், எம்.சீ. கிஜாஸ், அவர்களும், மற்றும் பிரதி அதிபர் திருமதி கபூர், பகுதித் தலைவர்களான எம்.ரீ.ஏ. முனாப், டீ.கே.எம். மௌசீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களின் வினைத்திறனான புத்தாக்கச் செயற்பாடுகளும் ,நிலைபேறான ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.