பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
61

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்கு, இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தரங்களுக்கான வகுப்பறைகள் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் குளவி கூடு ஒன்று உள்ளமையினால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாடசாலையின் அதிபர் கே.என்.சீ பிரபாகரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில், வலய கல்வி காரியாலயம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குளவிக் கூட்டை இன்றைய தினத்திற்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாளைய தினத்தில் வழமைபோல் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் அதிபர் கே.என்.சீ பிரபாகரன் தெரிவித்தார்.