கொழும்பு பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர், திடீர் சுகவீனம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெலி மீன்கள், கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களில் பட்டதால், அங்கு இருந்த அனைவருக்கும், தோல் அரிப்பு மற்றும் தோல் எரிச்சல் ஏற்பட்டது.
இதனால், நீராயடி 10 பேரும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பாணந்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.