பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த, பியுமா என அழைக்கப்படும் பியூமி ஹஸ்திகவை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
பியுமா டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அதனையடுத்து, அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவருமான ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஆவார். இவர் பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழு தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகைளை பேணி வந்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.