பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர் எஸ்.ரி.எவ் ஆல் கைது!

0
173

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் மற்றும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க விசேட அதரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு கோன்கடவல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை கைதுசெய்வதற்கு இதற்கு முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிற்பபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரிடமிருந்து கைகுண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அம்பன்பொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.