’பாதிய’ மரணம்!

0
4

காலில் காயங்களுடன் பொல்பிதிகமவில் உள்ள ஒரு காட்டில்  குழியில் இருந்து மீட்கப்பட்டு ஒன்பது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ‘பாதிய’ என்ற யானை செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்தது.

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவ ஆலோசனையின்படி திங்கட்கிழமை (14) அன்று பாதியவை மறு பக்கம் திருப்பி விடப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தங்கோல்லவின் ஆலோசனையின் பேரில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உட்பட்ட  குழு  பாதியவுக்கான அனைத்து சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இருப்பினும், பல நாட்களாக உயிருக்கும் மரணத்திற்கும்  இடையில் போராடி வந்த, பாதிய செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்தது.