அரச அச்சக திணைக்களத்தில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள் திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது அச்சகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்