பாம்புகளின் தீவு எது தெரியுமா…!

0
148

உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மாத்திரம் வாழும் தீவு பிரேசில் நாட்டில் உள்ளது. இந்த தீவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகள் உள்ளன.

பாம்புகளின் தீவு என அழைக்கப்படும் இந்த இடத்திற்கு இல்காடா குயீமடா கிராண்டு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாம்புத் தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழ்கின்றன.இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன.

அதிக பாறைகள் கொண்ட நிலப்பரப்பாகவும், வெப்ப மண்டல பகுதியாகவும் இருப்பதால் இந்த தீவில் மனிதனோ அல்லது வேறு பாலூட்டிகளோ வாழ முடியாத நிலை உள்ளது.

இதனால் தன்னை வேட்டையாடவோ கொல்லவோ எந்த உயிரினமும் இல்லாத காரணத்தால் பாம்புகள் தங்கள் இனத்தை அந்த தீவில் பெருக்கி அதை தனக்கான தீவாக மாற்றியுள்ளன.

உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட “கோல்டன் லான்ஸ்ஹெட்”(Golden Lancehead) வகை பாம்புகள் இல்காடா குயீமடா கிராண்டு எனும் தீவுகளில் மாத்திரம் உள்ளன.

தென் அமெரிக்காவில் 80 வீத பாம்பு மரணங்களுக்கு இந்த பாம்புகள்தான் காரணமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவில் பாம்புகளை அகற்றிட்டு வாழை சாகுபடி செய்து மக்களைக் குடியமர்த்த பல ஆண்டுகளாக பிரேசில் அரசு முயற்சித்தது.

எனினும், மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தி கொண்ட பாம்புகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பிரேசில் அரசு, அதன் முயற்சியைக் கைவிட்டு இத்தீவுக்குள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதித்தது.

மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.