பாரவூர்த்தி மீது யானை மோதி விபத்து!

0
12

பலுகஸ்வெவ பகுதியில் இன்று (07) அதிகாலை நெடுஞ்சாலையில் பயணித்த யானை ஒன்று பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்துக்குள்ளான யானையின் தந்தங்கள் உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்ற நிலையில்இ கணேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கால்நடை திணைக்களத்திற்கு அறிவித்து பாரவூர்த்தியை வனவிலங்கு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சுமேதா என்ற யானையே காயமடைந்துள்ளதாக ஊகிக்கப்படுகின்றது.வனவிலங்கு அதிகாரிகள் யானையை தேடும் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.