பாராளுமன்றத்தில் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை அரை மணி நேரம் குறைப்பதற்கு தீர்மானம்

0
146

பாராளுமன்றத்தில் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை அரை மணி நேரம் குறைப்பதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு தீர்மானம் மீதான விவாதம் வரும் 29ஆம் திகதி காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற உள்ளது.

வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 30, 31, 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.