27 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாராளுமன்றத்தை அரசமைப்பு சபையாக்க வேண்டும் – கிரியெல்ல

புதிய அரசமைப்புக்கு அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசமைப்பு சபையாக மாற்ற வேண்டும். அரசாங்கம் இவ்வாறு செயல்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசமைப்பு தயாரிப்புக்கு ஒத்துழைக்கும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

புதிய அரசமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கம் புதிய குழுவொன்றை நியமித்திருக்கின்றது. இந்தக் குழுவுக்கு மக்களின் கருத்துக்களை வழங்க முடியும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் வழங்குமாறு எமக்கு அறிவித்திருந்தது. இதுதொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

அத்துடன் அரசாங்கத்துக்கு நெருக்கமான சட்டத்தரணிகளைக்கொண்ட குழுவை நியமித்து அரசமைப்பொன்றை தயாரிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு.

நியமிக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணிகள் தொடர்பில் எமக்கு பிரச்னை இல்லை. என்றாலும் புதிய அரசமைப்பொன்றை தயாரிப்பதாக இருந்தால், நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழுப் பாராளுமன்றத்தையும் அரசமைப்பு சபையாக அமைக்கவேண்டும்.
ஏனெனில் பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. அரசாங்கம் இவ்வாறு செயல்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசமைப்பு தயாரிப்புக்கு சம்பந்தப்படும்.

அத்துடன் அரசாங்கத்தின் புதிய அரசமைப்பு நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கடிதம் ஒன்றின் மூலம் தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றது.

அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவில்லாமல் தயாரிக்கப்படும் அரசமைப்பினூடாக பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியாது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அரசமைப்பு தொடர்பாகவும் விமர்சனங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது, சிறுபான்மை மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தவறியமையாகும். அந்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது- என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles