பாராளுமன்றத்தை ஒரு நிறுவனமாகக் கருதி சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்: பிரதமர்

0
130

இருட்டடிப்பு செய்வதால் கிடைக்கும் உதவிகள் கிடைக்காமல் போகலாம் என்பதால், அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வில் பட்டாலி சம்பிக்க ரணவக்க கூறிய கருத்துக்களை நான் செவிமடுத்தேன். நாம் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளை அவர் நன்கு உணர்ந்துள்ளார்.

இந்த பாராளுமன்றத்தில் சகலரும் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமையில், பாராளுமன்றத்தை ஒரு நிறுவனமாக கருதி சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.