பாராளுமன்றத்தை படம்பிடித் ட்ரோன்!

0
20

பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை (16) பல மணி நேரம் ட்ரோன் மூலம் படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பல ட்ரோன்களைப் பயன்படுத்தி வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் பற்றிய ஆவணப்படம் தயாரிப்பதற்காக பாராளுமன்ற வளாகம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகள் குழுவும், அந்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வப்போது ட்ரோன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.