25 C
Colombo
Sunday, November 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்!

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என  இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இது தவிர, வருகை கொடுப்பனவாக பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில்  2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

 தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள  எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும் என்றும்  குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் குறிப்பிட்டார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles