28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு – அமைச்சர் டக்ளஸ்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான்  ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக்  கடந்து வந்தவன்.

தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு.துரதிஸ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை.  

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன் ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன்

ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles