பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி, தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி பாரிஸில் தங்கம் வென்றார், அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை எவ்52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார்.
ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். தொடர்ந்து 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
மாற்றுத்திறனாளியான ரிகிவன் கணேசமூர்த்தி, 2023 இல், அவர் ஷொட் புட் எவ்55 மற்றும் வட்டு எறிதல் எவ்54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சம்பியனானார், ஒரு வருடம் கழித்து, பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமாகி சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.
வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார்.