பாலித தேவர பெருமவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் அனுதாபச் செய்தி

0
102

‘அரசியலுக்கு அப்பால் பாலித எனும் ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை நாடு இழந்துள்ளது’- மற்றும் தேசத்திற்கும் இது ஒரு பாரிய இழப்பாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘எனது 30 வருடகால அரசியல் வரலாற்றில் பாலித தேவர பெரும போன்று பணிவான, உணர்ச்சிமிக்க, அடிமட்ட மக்கள் பிரதிநிதியை நான் கண்டதில்லை, மனிதாபிமானம் மிகைத்த உண்மையான மனிதர், தனித்துவம் மிக்கவர், மக்களோடு மக்களாக பணியாற்றும் மக்கள் சேவகன் என்றும்

கடந்த நல்லாட்சி அரசில் சமூக வலுவூட்டல் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நானும் அதன் பிரதி அமைச்சராக அவரும் செயற்பட்டோம். இனவாதம், பிரதேசவாதம் எல்லாம் கடந்து மனிதநேயத்தை நேசிக்கும் ஒருவராக செயற்பட்டவர்.

எதிர்பாராத திடீர் இழப்பு செய்தியை அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன. முழுநாடும் மனிதநேய பண்பாளனை இழந்த செய்தியால் துயர் அடைந்து நிற்கிறது. இவரது இழப்பால் நிலைகுலைந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.