பால் தேநீர் விலை நாளை முதல் குறைகிறது

0
144

பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பால்மா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.