பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விஷ்ணு. அவர் சின்னத்திரையில் பல முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
அவர் ஷோவில் பைனல் வரை சென்ற நிலையில் 4ம் ரன்னர் அப் என அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விஷ்ணுவுக்கு ஹீரோ ஆகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.